சுசாந்தா நந்தா என்ற இந்திய வனத்துறை அதிகாரி தனது டுவிட்டர் பக்கத்தில் அடிக்கடி சுவாரசியமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Advertisment

அதில் ஒட்டகம் ஒன்று நீண்ட நாட்களாக வெளியூர் சென்று வந்த தனது உரிமையாளரை நெகிழ்ச்சியுடன் அனைத்து கொள்கின்றது. காண்போரை நெகிழ்ச்சியடைய வைக்கும் வகையில் அந்த வீடியோ உள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகின்றது.