Skip to main content

70 ஆண்டுகளில் கம்போடிய முதல் பெண் ஜனாதிபதி!

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Cambodia's first female president in 70 years!

 

கம்போடியாவில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 23 நடைபெற்றது. அதில், ஆசியாவின் நீண்ட கால ஆட்சியாளர் என்ற பெருமையைப் பெற்ற, எழுபது வயதான ஹூன் சென் மீண்டும் பிரதமராக தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் தனது மகன் ஹூன்மான்ட்டை பிரதமராகவும் அறிவித்தார். 70 வருடங்களாக கம்போடியாவில் பெண் ஜனாதிபதியாக  எவரும் பதவி வகிக்கவில்லை. இந்நிலையில், கம்போடியாவின் தேசிய சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத் தலைவராக குவான் சுதாரி செவ்வாய்க்கிழமை முதல் புதிய ஐந்தாண்டு காலத்திற்கு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் கம்போடியா நாட்டின் வரலாற்றில் உயர் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி ஆனார்.

 

கம்போடியாவின் நேஷனல் டெலிவிஷன் ஆஃப் கம்போடியா'வின் (டிவிகே) கருத்துப்படி, 70 வயதான குவான் சுதாரி, தற்போது ஆளும் கம்போடிய மக்கள் கட்சியின் நிலைக்குழுவில் உறுப்பினராகவும், தேசிய சட்டமன்றத்தின் இரண்டாவது துணைத் தலைவராகவும் உள்ளார். கம்போடியாவில் ஜூலை 23 நடந்த பொதுத் தேர்தலில் கம்போடிய மக்கள் கட்சி, தேசிய சட்டமன்றத்தில் 125 இடங்களில் 120 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியைப் பெற்றது. பின்னர் சுதாரி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் வாக்கெடுப்பின் போது சுமார் 123 சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை ஒருமனதாக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர் என்பது கவனிக்கத்தக்கது. 1990களில் அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார் சுதாரி. தேசிய சட்டமன்றத்தின் தலைவராவதற்கான அவரது பயணம் என்பது பல ஆண்டுகளாக அரசியல் அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாட்டுடன் அமைந்தது. அவர் முன்பு வகித்த தேசிய சட்டமன்ற இரண்டாவது துணைத் தலைவர் பதவிதான் சுதாரியின், இந்தப் புதிய பொறுப்பை ஏற்க அவருக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

 

இது குறித்து கம்போடியாவின் ராயல் அகாடமியின் ( பல்கலைக் கழகம் ) பொதுச் செயலாளர் யாங் பியூ, "தேசத்திற்குக் கிடைத்த ஒரு குறிப்பிடத்தக்க கௌரவமாக பார்க்கிறேன்" என்றார். தொடர்ந்து, கம்போடியாவிற்கும், தென்கிழக்கு ஆசியாவிற்கும் இந்த நியமனம் முக்கிய தருணம். கம்போடியாவில் முதன்முறையாக பெண் ஒருவர் சட்டப் பேரவைத் தலைவராக பதவியேற்றுள்ளார். இந்த சாதனை வெறும் மைல்கல் அல்ல, இது நமது தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்,'' என குறிப்பிட்டார்.

 

உலகின் முதல் பெண் ஜனாதிபதி அர்ஜென்டினாவின் மர்ம எஸ்டெலா 'இசபெல்' மார்டினெஸ் கார்டாஸ் டி பெரோன் ஆவார். இவர் 1974 முதல் 1976 வரை அர்ஜென்டினாவின் ஜனாதிபதியாக இருந்தார். தனது கணவர் ஜனாதிபதி ஜுவான் பெரோன் பதவியில் இருந்த போது இறந்துவிட்டார். இதனால் இசபெல் ஜூலை 1, 1974 முதல் மார்ச் 24, 1976 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். உலகின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஜனாதிபதி ஐஸ்லாந்தின் விக்டிஸ் ஃபின்போகாட்ஸ்டிர் ஆவார். மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 2007 ம் ஆண்டு முதல் பெண் ஜனதிபதியாக பிரதீபா பாட்டிலை நியமித்தது காங்கிரஸ் தலைமையிலான அரசு. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய தடுப்பூசியை செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பிரதமர்!

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

HUN SEN

 

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவாக்சின்’ என்ற இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசியை சீரம் நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது.

 

இந்தநிலையில் கரோனா தடுப்பூசியை தங்கள் நாட்டிற்கு வழங்குமாறு கம்போடியா பிரதமர் ஹன் சென், இந்திய பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி, கம்போடியாவிற்கு ஒரு லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப இந்தியா ஒப்புதல் அளித்தது. அதனையடுத்து கம்போடியாவிற்கு தடுப்பூசி அனுப்பப்பட்டது.

 

இந்நிலையில் கம்போடியா பிரதமர் ஹன் சென், அவரது மனைவி, அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்டோர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர். இந்தியாவின் தடுப்பூசியை முதல்முறையாக வெளிநாட்டுப் பிரதமர் ஒருவர் செலுத்திக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

இங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிப்பு!! எதற்காகத் தெரியுமா..?

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

rat honored by england

 

கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா என்ற எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. 

 

விலங்குகள் ஆர்வலரான மரியா டிக்கினால் தொடங்கப்பட்ட 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' என்ற அமைப்பு கடந்த 77 ஆண்டுகளாக மனிதர்களின் நலனுக்காகச் சேவையாற்றும் விலங்குகளுக்குத் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்து வருகிறது. இதுவரை பல்வேறு நாடுகளின் ராணுவத்தில் பணியாற்றிய 34 மோப்பநாய்கள், 32 புறாக்கள், நான்கு குதிரைகள் மற்றும் ஒரு பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தங்கப்பதக்கத்தை கம்போடியா நாட்டை சேர்ந்த மகவா என்ற எலி பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவில் காணப்படும் பெரிய உடலமைப்பைக் கொண்ட ஒருவகை ஏழையான இது கடந்த நான்கு ஆண்டுகளாக கம்போடியாவில் புதைத்துவைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவதில் ராணுவத்தினருக்கு உதவிவந்துள்ளது. 

 

கம்போடிய நாட்டில் பாதுகாப்புகளுக்காக 60 லட்சம் வரை கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணிவெடிகளால் இதுவரை 64 ஆயிரம் பேருக்குமேல் இறந்துள்ளனர். இதனால், கம்போடிய அரசு கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணிவெடிகளை அகற்றி வருகிறது. இதற்காக மகவா என்ற இந்த எலியை அந்நாட்டு அரசு பயன்படுத்தியுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்த எலியைக் கொண்டு 39 கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர். மேலும், வெடிக்காத 28 ஆபத்தான பொருட்களையும் மகவா கண்டறிந்துள்ளது. மேலும், இதுவரை 1.41 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு மேல் மகவா நிலத்தைத் தோண்டியுள்ளது. எனவே இந்த எலியின் சேவையைப் பாராட்டும் வகையில் இந்த ஆண்டிற்கான தங்கப்பதக்கத்தை மகவா எலிக்கு வழங்கியுள்ளது 'நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கான மக்கள் மருந்தகம்' அமைப்பு.