உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 25 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1.7 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 20,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dj.jpg)
அமெரிக்காவில் வேறு எங்கும் இல்லாத வகையில், 8 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து கரோனா அதிகம் பாதித்த நாடாக ஸ்பெயின் உள்ளது. அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 21,000க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள். இதற்கிடையே அந்நாட்டை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கும், குணமானவர்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்வதற்கும் எவ்வித கட்டணமும் வாங்காமல் சேவை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவருக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
கரோனா பாதிப்பில் இருந்து மீண்டவரை அவரது வீட்டிற்கு அழைத்து செல்ல அழைக்கிறார்கள் போல என்று நினைத்துக்கொண்டு அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு வந்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கரோனா நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் சேவையை பாராட்டி மருத்துவர்களும், செவிலியர்களும் கைத்தட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மருத்துவமனை சார்பில் அவருக்கு ஒரு பெரிய தொகைக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)