கலிப்போர்னியாவில் வரலாறு காணாது அளவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்துவருகிறது.
இந்த காட்டுத் தீ குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலிப்போர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயை நான் பெரும் பேரிடர் இழப்பாக அறிவித்திருக்கிறேன். நான் உங்களுடன் எப்போதும் இருப்பேன். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவன் துணை இருப்பார் என்று வேண்டிகொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.