Advertisment

ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்த முட்டைக்கோஸ்...!

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த ரோஸ்மேரி நோர்வுட் மற்றும் சியன் காட்மன் (Rosemary norowood & Sean cadman) என்பவர்கள், அவர்களின் தோட்டத்தில் ஒரு ஆள் உயரம் அளவிற்கு பெரும் ராட்சத முட்டைக்கோஸ் ஒன்றை அறுவடை செய்திருக்கிறார்கள்.

Advertisment

cabbage

இந்த ராட்சத முட்டைக்கோஸ் வளர்ப்பு மற்றும் அறுவடை குறித்து அவர்கள் தெரிவித்திருப்பதாவது, கடந்த ஏப்ரல் முதல் இதனை வளர்த்துவருகிறோம். மேலும், தோட்டப் பூச்சிகள், மற்றும் பயிரை சேதப்படுத்தக்கூடிய விலங்குகளிடமிருந்தும் மிகவும் எச்சரிக்கையுடன் பாதுகாத்துவருகிறோம் என்று சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

Advertisment

வட அமெரிக்காவில்அமைந்துள்ள அலாஸ்கா எனும் பகுதியில் இதுபோன்று பெரிய அளவிலான காய்கறிகள் வளர்வது சகஜம். ஆனால், இது ஆஸ்திரேலியாவில் வளர்ந்திருப்பதால் சற்று கவனம்பெறுகிறது.

இதனை வளர்ப்பதற்கு அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Australia cabbage
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe