பூனை வகைகளைச் சேர்ந்தது தான் சிங்கம், புலிகள். ஆனால் அவற்றை வீட்டில் வளர்க்க முடியாது. ஆனால் பூனைகளை வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்த்து பிள்ளைகளைப் போல் பராமரித்து வருகின்றார் மக்கள். இவற்றிற்கு அழகு மற்றும் பேசன் ஷோ கூட நடைபெறுகிறது.

Advertisment
Advertisment

இந்நிலையில், வெளிநாட்டில் ஒருவர் வீட்டில் புஷ் என்ற பூனையை வளர்த்து வருகிறார். அவர் சமீபத்தில்,ஆற்றில் இருந்து ஒரு ஆமையை பிடித்து வந்திருந்தார். அது வீட்டில் ஊர்ந்து செல்லும்போது, அதைப் பார்த்த புஷ் பூனை அதன் ஓடு மீது ஏறி உட்கார்ந்து உப்பு மூட்டை ஏறுவது போல் ஊர்வலம் போனது. இதைப் வீடியோ படம் பிடித்த உரிமையாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.