Advertisment

கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து; 20 மாணவர்கள் பலி

zdfh

Advertisment

நேபாள நாட்டில் தாவரவியல் பயிற்சிக்காக சென்ற மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட 23 பேர் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளனர். தனியார் கல்வி நிறுவனத்தில் படித்து வரும் மாணவர்கள் தங்களது தாவரவியல் பயிற்சிக்காக மலைப்பாதையில் பேருந்தில் செல்லும்பொழுது இந்த விபத்து நடந்துள்ளது. மலைப்பாதையிலிருந்து பேருந்து பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்துள்ளது. இதில் 20 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், ஓட்டுநர் ஆகியோர் பலியாகியுள்ளனர். மேலும், காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மோசமான சாலையும், ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டியதும்தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதே போல் கடந்த வாரம் அங்கு நடந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

accident Nepal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe