ஈராக்கில் தொடரும் சோகம்... சாலை விபத்தில் 19 பேர் பலி!

ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டார். டிரம்ப்பின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று ஈரான் நாட்டில் உள்ள புஷ்பார் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ரிக்டர் அளவில் 4.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பு முடிவதற்குள் மஜரந்தான் மாகாணத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 19 பேர் பலியானார்கள். வாகனத்தில் பிரேக் பிடிக்காததே விபத்துக்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

accident
இதையும் படியுங்கள்
Subscribe