hon

ஹாங்காங் விமான நிலைய சாலையில் ஒரு காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர், 32 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில்சிலர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் விபத்துக்களே நடக்காத ஹாங்காங் சாலைகளில், சமீபத்தில் நடைபெற்ற மிக பெரிய விபத்து என அங்குள்ள ஊடகங்களால் கூறப்படுகிறது.