இந்தோனிஷியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் சுமத்ரா தீவுக்கு தெற்கு பகுதியில் பனரல் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் பலியானார்கள்.
மேலும் 14 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து விபத்தில் 25 பேர் பலியான சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.