bucket price ... Amazon customers in shock!

ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக இருக்கக்கூடிய அமேசானில்பிளாஸ்டிக் பக்கெட் விலை 25,999 ரூபாய் என்றும், பிளாஸ்டிக் குளியல் குவளையின்விலை 10 ஆயிரம் ரூபாய் என்றும் வெளியாகியுள்ள அறிவிப்பு அமேசான் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

ஃப்ளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் ஏ டூ இசட் என எல்லா பொருட்களுமே கிடைக்கும். மொபைல், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோக பொருட்கள், விளையாட்டு பொருட்கள், இசைக்கருவிகள், ஆயத்த ஆடைகள் என அனைத்தும் குவிந்து கிடக்கும் ஆன்லைன் ஷாப்பிங் உலகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணி வகித்து வருகிறது.

Advertisment

இந்நிலையில் அமேசான் வலைப்பக்கத்தில் அன்றாடம் பயன்படுத்தும் 6 செட் கொண்டசாதாரண பிளாஸ்டிக் பக்கெட்விலை25,999 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த விலை தள்ளுபடி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல் மார்க்கெட்டுகளில் 100 ரூபாய்க்கு கிடைக்கும் பிளாஸ்டிக் குளியலறைகுவளைகள் 9,914 ரூபாய் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இஎம்ஐ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவை உண்மையான விலையா அல்லது தொழில்நுட்பகோளாறால் ஏற்பட்ட பிழையாஎன ஒருபக்கம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அமேசான் வாடிக்கையாளர்கள்.