உலகப்புகழ் பெற்ற குங்-ஃபூ சண்டை வீரரும் திரைப்பட நடிகருமான புரூஸ்லீ தனிப்பட்ட முறையில்பயன்படுத்திய பொருட்கள்ஏலத்திற்கு வந்தது.
மறைந்த அமெரிக்கநடிகரும்குங்-ஃபூ சண்டை வீரருமானபுரூஸ்லீ புயல்வேகத்தில் சண்டை போடும் காட்சிகளால் திரைப்பட ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றார்.
தற்போது எவ்வளவோ ஆக்க்ஷன் காட்சிகள்,ஆக்க்ஷன்நடிகர்கள் வந்தாலும்புரூஸ்லீக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இன்று வரை இருந்து வருகிறது. இப்படி மக்கள் மனதில் தனியிடம் பிடித்தபுரூஸ்லீ தனிப்பட்ட முறையில்பயன்படுத்திய கூலிங்க்ளாஸ், கையுறை, உடற்பயிற்சிக்கு பயன்டுத்திய தம்புல்ஸ், முகக்கவசம் என அனைத்தும் அண்மையில் ஏலம் விடப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
ஜீக்குனிட்டோ என்பவரிடம் இருந்தபுரூஸ்லீயின் இந்த பொருட்கள் அனைத்தும் ஏலம்விட்டப்பட்டது. ஜீட்டோ, புரூஸ்லீ தனிப்பட்ட முறையில்பயன்படுத்திய இந்த பொருட்களை ஏலம் விடுவதால் தனக்கு65 ஆயிரம் டாலர் வசூலாகும் என எதிர் பார்த்திருந்த நிலையில் வெறும் 12 ஆயிரம் டாலர் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏலத்தில் விடப்பட்டுள்ளபுரூஸ்லீயின் தனிப்பட்டபொருட்கள் இவ்வளவு குறைந்த விலைக்கு ஏலம் போயிருப்பது அவரது தீவிரரசிகர்கள் மனதில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.