உணவகம் ஒன்று தங்களது உணவை சுவைத்துப் பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்வதற்கு தினமும் 9 ஆயிரம் ரூபாய் சம்பளம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தின் கிராஸ்மியர் நகரில் உள்ள டபோடில் என்ற ஹோட்டலில் சுவையான உணவுகளை வழங்கும் நோக்கில், டேஸ்ட் பார்க்கும் வேலையைச் செய்ய ஆட்களை நியமிக்க இருக்கிறது.

Advertisment

ss

ஹோட்டலில் தயாராகும் டீ, காபி மற்றும் நொறுக்குத் தீனி தினுசுகளை சுவைத்துப் பார்த்து சொல்ல வேண்டியதுதான் வேலை. இந்த வேலையில் சேர்பவர்களுக்கு தினசரி 129 டாலர் சம்பளத்தில் சம்பளம் கொடுக்கவுள்ளது. அதைப் பற்றி அந்த ஹோட்டல் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பிரிட்டனில் சிறந்த உணவகம் இதுதான் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தபோகிறோம். இப்போது எங்களுக்கு நாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருளின் சுவையை மதிப்பிடும் சுவை சோதனையாளர்கள் தேவை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.