சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மதுபோதையிலிருந்த சிறுமியை கைகளில் தூக்கிச் சென்ற இந்திய பொறியியல் மாணவர் அவருடைய அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இந்த வழக்கில் போலீஸ்விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய மாணவர்ப்ரீத் விகால்என்பவருக்கு 6 ஆண்டுகள் மற்றும்9 மாதங்கள்சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது இங்கிலாந்தில் உள்ளநீதிமன்றம்.