Advertisment

கலர்கலர் பாட்டிலில் காற்று விற்பனைக்கு... எந்த ஊர் காற்று வேண்டும் என ஆர்டர் எடுக்கும் நிறுவனம்..

british company sells air in bottles

சுவாசிப்பதற்கான காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யத்தொடங்கியுள்ளது இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த நிறுவனம்.

Advertisment

இங்கிலாந்தின் பிரபல இடமாற்ற வலைதளமான 'My Baggage' சாதாரண காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் தொழிலைத் துவங்கியுள்ளது. இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாட்டிலில் நிரப்பப்பட்ட காற்றினை விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறது இந்நிறுவனம். இந்த 'புட்டி' காற்று பல்வேறு ஃப்ளேவர்களிலும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப எந்த ஃப்ளேவர் வேண்டுமோ அதனை வாங்கிக்கொள்ளலாம்.

Advertisment

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திலிருந்து காற்று அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட ஒரு பாட்டிலில் உள்ள காற்றின் விலை, இந்திய மதிப்பில் 2,500 ரூபாய் ஆகும். இந்த காற்று பாட்டில்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இங்கிலாந்து மக்களால் அதிகம் வாங்கப்படுவதாக 'My Baggage' நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல, இந்த நிறுவனத்திடம் சிறப்புக் கோரிக்கை வைத்தால் அவர்கள் வாழ்ந்த சொந்த ஊரின் காற்றையும் பாட்டிலில் பிடித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது இந்நிறுவனம்.

England
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe