Advertisment

சுகாதார பணியாளர்களுக்கே பஞ்சம்; மருத்துவ சேவையில் ராணுவத்தை களமிறங்கிய பிரிட்டன்!

BRITAIN

உலகின் பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் மற்றும்கரோனாபாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. பிரிட்டனிலும் கடந்த ஒருவார காலமாக தினசரி கரோனாபாதிப்பு ஒன்றரை லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பிரிட்டன் மருத்துவமனைகளில் சுகாதார பணியாளர்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதன்காரணமாகபிரிட்டன் அரசு, சுகாதார பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள மருத்துவமனைகளில் ராணுவத்தை களமிறக்கியுள்ளது. அதேபோல் கரோனாசோதனை நடத்த உதவவும், கரோனாதடுப்பூசி செலுத்துவதில் உதவவும் ராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

நாட்டில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருவதாலும், ஒமிக்ரான்லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாலும் புதிய கட்டுப்பாடுகள் இன்றியே இங்கிலாந்து தற்போது ஏற்பட்டுள்ள கரோனாஅலையை தாங்கும் என தெரிவித்து வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அடுத்த சில வாரங்கள் சாவல் மிக்கதாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

OMICRON pandemic britain
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe