Skip to main content

எரிமலை குழம்பில் இருந்து செங்கற்கள்... அசத்தும் பிலிப்பைன்ஸ் அரசு!

Published on 21/01/2020 | Edited on 22/01/2020

எரிமலை குழம்பில் இருந்து பிலிப்பைன்ஸ் அரசு செங்கல் தயாரித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் நிறைய எரிமலைகள் உள்ளன. மாதந்தோறும் ஏதாவது ஒரு எரிமலை வெடித்து லாவா குழம்பை வெளியிடும். மேலும் அந்த எரிமலை குழம்பு காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதனை முறைபடுத்துவதற்கு அந்நாட்டு அரசு தற்போது புதிய வழிமுறைகளை கண்டறிந்துள்ளது.



அதன்படி, லாவா குழம்புகளை சேகரித்து அதனை செங்கற்களாக தயாரித்துள்ளனர். நாளொன்றுக்கு முதற்கட்டமாக தற்போது 5000 செங்கற்கள் தயாரிக்கப்படுவதாகவும் பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது. களிமண் செங்கற்களை விட இது உறுதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படிபடியாக செங்கற்கள் தயாரிப்பு எண்ணிக்கை உயர்த்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி!

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Prime Minister Modi left for South Africa

 

பிரதமர் மோடி 3 நாள் பயணமாகத் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்.

 

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மோடி 3 நாள் பயணமாகத் தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார். 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் மோடி பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.

 

இன்று முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்கும் மோடி அதன் பின்னர் கிரீஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ்ஸின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கிரீஸ் நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையென இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 

 

 

Next Story

செங்கல் சூளைக்கு அனுமதியின்றி மண் எடுக்கலாம் - தமிழ்நாடு அரசு அரசாணை!

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

 Soil can be taken for brick kiln without permission - Government of Tamil Nadu!

 

செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

 

முன்னதாக சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் மண் எடுக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்த நிலையில், அதனைத் திருத்தி செங்கல் சூளை, மண்பாண்ட தொழில் செய்பவர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் மண் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண் எடுக்க சுதந்திரம் வேண்டும் என பல ஆண்டுகளாக அத்தொழிலில் ஈடுபடுவோர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

ஏரிகளை ஒட்டியப்  பகுதிகளில் 1.5 மீட்டர் ஆழம் வரை மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மண் எடுக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரங்களை நட வேண்டும். கிராமப்புற சாலையிலிருந்து 10 மீட்டருக்குள்ளும், தேசிய நெடுஞ்சாலை, ரயில் பாதை, ஆறுகளில் இருந்து 50 மீட்டருக்குள்ளும் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.