Advertisment

ரேம்ப் வாக்கின் போதே தாய்ப்பால்...ரசிகர்களை நெகிழவைத்த மாடல்...

mara

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

மாரா மார்ட்டின் என்ற பெண், பசியில் இருந்த தன்னுடைய ஐந்து மாத கைக்குழந்தைக்கு பிகினி ரேம் வாக் போட்டியின் போது பாலூட்டினார். இச்சம்பவம் உலகரங்கில் பாராட்டை பெற்றுவருகிறது.

Advertisment

அமெரிக்காவின் ஸ்போர்ட்ஸ் இல்லூஸ்ட்ரேடட் என்கிற பத்திரிகையால் நடத்தப்பட்ட அழகியற் போட்டியின் 16 இறுதிசுற்று அழகிகளில் ஒருவர் மாரா. இவர் ரேம்ப் வாக் செல்ல இருந்தபோது, அவரது குழந்தை பசியால் அழுதது. இவர் உடனடியாக குழந்தையை கையில் ஏந்திக்கொண்டே பாலூட்டி ரேம்ப் வாக்கை முடித்தார். இவர் இவ்வாறு செய்தவுடன் போட்டியை நடத்திய நிறுவனத்தால் அந்த வீடியோ பகிரப்பட்டது. இது உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் மத்தியில் பாராட்டை பெற்றுவருகிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுகுறித்து மாரா கூறுகையில்," என்னுடைய குழந்தைக்கு அது பசியெடுக்கும் நேரம், அதனால் நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவளுக்கு பாலூட்டினேன். தாய் தன்னுடைய குழந்தைக்கு பாலூட்டுவது என்பது எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம், குழந்தைக்கு பாலூட்டுவதை கூச்சப்படக்கூடாது என்றும் இதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு கிடைத்திருப்பதாக தெரிவிக்கிறார்கள். இச்சம்பவத்தால் நானும் என் குழந்தையும் பல பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாய் வந்துள்ளோம் என்பதை என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை" என்றார்.

2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பெண் எம்பி ஒருவர் தன் குழந்தை பாலூட்டிக்கொண்டே பேசியது பெரிய அதிர்வலையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

America Human
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe