Advertisment

வங்கியில் வேலை செய்யும் ஸ்பைடர்மேன்; கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்...

hgghg

மார்வெல் திரைப்படங்களில் அதிக ரசிகர்களை கவர்ந்த ஒரு சூப்பர்ஹீரோ என்றால் அதில் ஸ்பைடர்மேனும் ஒருவர். அப்படிப்பட்ட ஸ்பைடர்மேன் உடையில் பிரேசில் நாட்டில் ஒருவர் நேற்று வங்கி பணியை மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாய் பாவ்லோ நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றும் ஒரு ஊழியர் பணியில் தனது கடைசி நாளை தான் இப்படி வித்தியாசமாக நிறைவு செய்துள்ளார். பிரேசில் நாட்டு வங்கியில் வேலைபார்த்துவரும் அந்த இளைஞர் அந்த வங்கி பணியிலிருந்து விலகுவதால் தனது கடைசி நாளன்று சக பணியாளர்கள் யாரும் வேதனைப்பட கூடாது என்ற நோக்கில் இப்படி ஸ்பைடர்மேன் உடையுடன் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ஸ்பைடர்மேன் உடையுடன் அவர் வங்கியில் வேலை செய்யும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவ, மார்வெல் ரசிகர்களும், டி.சி ரசிகர்களும் தொடர்ந்து மீம் போட்டு ஸ்பைடர்மேனை கலாய்த்து வருகின்றனர்.

Advertisment

brazil marvels spiderman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe