/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ffh.jpg)
முதுகுவலி என்று மருத்துவமனைக்குச்சென்றவருக்கு மூன்று சிறுநீரகம் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த 38 வயதான ஒருவருக்குக் கடுமையான முதுகுவலி இருந்துள்ளது. இதனால் கடும் பாதிப்புக்குள்ளான அவர் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரைப் பார்த்துள்ளார். அவரைச் சோதனை செய்த மருத்துவர் உடலை ஸ்கேன் செய்ய கூறியுள்ளார். மருத்துவர் கூறியவாறே அவரும் ஸ்கேன் எடுத்துள்ளார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு மருத்துவரைச் சந்தித்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த மருத்துவர் இது சாதாரண முதுகுவலி தான் என்று கூறியுள்ளார். ஆனால் அடுத்து அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உங்களுக்கு மூன்று கிட்னிகள் இருப்பதாகவும், இடது புறம் ஒரு கிட்னியும், வலதுபுறம் இரண்டு கிட்னியும் இருப்பதாகவும் அவரிடம் கூறியுள்ளார். இதனால் அதிரச்சி அடைந்த அவர், அதனால் ஏதேனும் உடலில் பாதிப்பு ஏற்படுமா என்று கேட்டுள்ளார். ஆனால், அப்படி எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் உலகில் சிலருக்கும் மூன்று கிட்னிகள் இருப்பதாகவும், இதனால் பயப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow Us