குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தனது நினைவுகளை இழந்ததாக பிரேசில் அதிபர் போல்சனேரோ தெரிவித்துள்ளார்.

brazil president Jair Bolsonaro lost his memory partially

Advertisment

Advertisment

பிரேசில் நாட்டின் அதிபரான போல்சனேரோ (64) கடந்த திங்கள்கிழமை குளியலறையில் வழுக்கி விழுந்ததாகவும், அதன் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும் அந்நாட்டு அதிபர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திங்கள்கிழமை இரவு அவருக்கு மருத்துவமனையில் மூளை ஸ்கேன் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி கூறியுள்ள போல்சனேரோ, “எனக்கு பகுதியளவு நினைவு இழப்பு ஏற்பட்டது. உதாரணமாக, முந்தைய நாளில் நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. தற்போது தான் பல நினைவுகளை மீட்டெடுத்து வருகிறேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன்” என தெரிவித்தார். ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கத்தி குத்து காரணமாக இவருக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.