Skip to main content

உலகளவில் டாப் 100 இடத்திற்குள் இடம் பெற்ற முதல் இந்திய நிறுவனம்...!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

 

tt

 

பிராண்ட் ஃபினான்ஸ் (Brand Finance) எனும் அமைப்பு உலக அளவில் முதல் 100 இடத்தில் இருக்கும் மதிப்பு வாய்ந்த பிரண்ட்களின் பெயர்களை ஒவ்வொரு வருடமும் வெளியிடும். அந்த வகையில் இம்முறை சர்வதேச பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிராண்ட் ஃபினான்ஸ் அமைப்பு, உலகளவில் முதலில் இருக்கும் 100 மதிப்பு வாய்ந்த பிராண்ட்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய நிறுவனமான டாடா குழுமத்தின் பெயர் 86-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்திய நிறுவனங்களிலேயே டாடா மட்டும்தான் முதல் 100 இடத்திற்குள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பிராண்ட் மதிப்பு பட்டியலில் கடந்த ஆண்டு 104-வது இடத்தில் இருந்த டாடா நிறுவனம் இந்த ஆண்டு 84-வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. டாடா நிறுவனத்தின் மொத்த பிராண்ட் மதிப்பு இந்த ஆண்டு 19.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளதாக பிராண்ட் ஃபினான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இது சதவீதத்தில் கணக்கிடும்போது 37% வரை உயர்ந்துள்ளது. இதுவே கடந்த வருடம் டாடாவின் பிராண்ட் மதிப்பு 14.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக டி.சி.எஸ், டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மூலமாகவே இந்த வளர்ச்சி இருப்பதாகவும் பிராண்ட் ஃபினான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய ஐ.டி. உலகின் தந்தை காலமானார்...

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

fc kohli passes away

 

 

இந்திய ஐ.டி. உலகின் தந்தை என அழைக்கப்படுபவரும், டி.சி.எஸ். நிறுவனத்தின் நிறுவனரும் முதல் தலைமை செயல் அதிகாரியுமான ஃபகீர் சந்த கோலி (96) நேற்று காலமானார். 

 

1924 ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்த இவர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் கனேடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய இவர், ஆகஸ்ட் 1951 ஆரம்பத்தில் இந்தியா திரும்பி, டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார். அப்போது, மும்பை முதல் புனே தடத்தில் டாடா நிறுவன மின் சேவைப் பணிகளை கணினிமயமாக்கியத்தில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.

 

அதன்பிறகு டாடா நிறுவனத்தின் கனவுத்திட்டமான தகவல் தொழில்நுட்ப துறையின் அந்நிறுவனம் கால்பதிக்க அடித்தளமிட்ட இவர், செப்டம்பர் 1969-ல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பொது மேலாளரானார். பின்னர், 1974 ஆம் ஆண்டில், அந்நிறுவனத்தின் இயக்குநராகவும், 1994 ஆம் ஆண்டு டி.சி.எஸ் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதேபோல 1968 இல் மும்பையில் தொடங்கப்பட்ட டி.சி.எஸ். நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரி எஃப்.சி.கோலி ஆவார். தனது 94 ஆவது வயது வரை தகவல் தொழில்நுட்பத்துறைக்காக பணியாற்றிய இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். 

 

இந்திய ஐ.டி துறையின் தனத்தை என அழைக்கப்பட்ட இவரது இறப்பிற்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எஃப்சி கோலி, தகவல் தொழில்நுட்ப உலகிற்கு தனது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். தொழில்நுட்ப துறையில் புதுமை மற்றும் சிறப்பான கலாச்சாரத்தை நிறுவனமயமாக்கியதில் அவர் முக்கிய நபராக இருந்தார். அவரது மறைவு வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது வருத்தம்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

பிரிக்ஸ் நாடுகளில் இந்தியா 3-ஆம் இடம்... ஆரோக்கியம், கல்வி மற்றும் திறமை...?

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

 

ww

 

போட்டித்திறன்மிக்க பொருளாதார குறியீட்டில் மொத்தம் 140 நாடுகள் பங்குபெற்றது. அதில்  இந்தியா 58-வது இடத்தை பிடித்துள்ளது. இதில் 2017-வுடன் ஒப்பிடுகையில் ஐந்து இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா 28-வது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடத்தில் அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளது. பிரிக்ஸ் நாடுகள் என்று கணக்கெடுத்து பார்த்தால் சீனா 28-ஆம் இடமும், ரஷியா 43-ஆம் இடமும் , இந்தியா 58-ஆம் இடமும், தென் ஆப்பிரிக்கா 67-ஆம் இடமும், பிரேசில் 72-ஆம் இடமும் பெற்றுள்ளது. அதே நேரம் இந்தியா ஆரோக்கியம், கல்வி மற்றும் திறமை ஆகிய துறைகளில் இன்னும் வளர வேண்டிய நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.