Advertisment

காதலியை வன்கொடுமை செய்து 111 முறை கத்தியால் குத்திக் கொன்ற காதலன் விடுதலை 

Boyfriend who stabbed his girlfriend 111 times to incident in Russia acquitted

ரஷ்யாவில் வேரா பெக்டெலோவா என்ற பெண், விளாடிஸ்லாவ் கன்யூஸ் என்பவரைக் காதலித்து வந்தார். பின்பு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேரா பெக்டெலோவா தனது காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸ் உடனான உறவை முறித்துக்கொண்டார்.இதனால் ஆத்திரமடைந்த விளாடிஸ்லாவ் கன்யூஸ்,வேரா பெக்டெலோவாவை பாலியல் வன்கொடுமை செய்து சித்திரவதைசெய்துள்ளார்.

Advertisment

பின்பு கத்தியை எடுத்து 111 முறைவேரா பெக்டெலோவாவை சரமாரியாகத்தொடர்ந்து குத்திக் கொன்றுள்ளார். வேரா பெக்டெலோவாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதலன் விளாடிஸ்லாவ் கன்யூஸை கைது செய்தனர். இந்த வழக்கில் விளாடிஸ்லாவ் கன்யூஸுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி ரஷ்ய நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து விளாடிஸ்லாவ் கன்யூஸ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில்ரஷ்ய அதிபர்புதின், விளாடிஸ்லாவ் கன்யூஸை விடுதலை செய்துள்ளார்.

Advertisment

ரஷ்ய - உக்ரைன் போரில் ரஷ்யா சார்பாக போரில் ஈடுபடகுற்றவாளிவிளாடிஸ்லாவ் கன்யூஸ் விருப்பம் தெரிவித்ததை அடுத்து அதிபர் புதின் கருணை அடிப்படையில் அவரை விடுதலை செய்துள்ளார். 17 வருட சிறைத்தண்டனையில் ஒரு வருடத்தைக் கூட இன்னும் முழுவதுமாக முடிக்காதவிளாடிஸ்லாவ் கன்யூஸ் தற்போது ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் கலந்துகொள்ளவுள்ளார்.விளாடிஸ்லாவ் கன்யூஸ், ரஷ்ய ராணுவ உடையில் கையில் ஆயுதத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

boyfriend Russia Ukraine woman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe