/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/italy-ni_0.jpg)
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் ஹுலியா சியோஷெத்தின் (22). இவர் வினிடோ மாகாணத்தில் உள்ள பட்ஹா பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், பிலிப்போ டுரிடோ (22) என்ற இளைஞருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹூலியாவும், பிலிப்போவும் பிரிந்தனர்.
இந்த நிலையில், ஹூலியா படித்து வந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவிருந்தது. இந்த விழாவில் பங்கேற்க புதிய உடை வாங்க ஹூலியா, கடந்த 16ஆம் தேதி வணிக வளாகத்திற்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறி, வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய ஹூலியா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில், பதட்டமடைந்த அவரது பெற்றோர் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், இத்தாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில், ஹூலியா வீட்டின் வெளியே உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஹூலியா வீட்டின் அருகே அவரது முன்னாள் காதலர் பிலிப்போவின் கார் வந்துள்ளது. அதன் பின், பிலிப்போ ஹூலியாவை கொடூரமாக தாக்கி அவரது காரில் வைத்து கடத்திச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, பிலிப்போவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின்பு பிலிப்போவை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தனர். அதன் பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் நடத்தியஅந்த விசாரணையில், தன்னுடனான காதலை ஹூலியா முறித்ததால், ஆத்திரமடைந்த பிலிப்போ ஹூலியாவை ஆள் நடமாட்டமில்லாத ஏரிக்கரைக்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு ஹூலியாவை கொடூரமாக தாக்கி, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பின்னர், ஹூலியாவின் உடலை அந்த ஏரிக்கரையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, போலீசார் அந்த ஏரிக்கரைக்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்த ஹுலியாவின் உடலை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட பிலிப்போவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)