Advertisment

'160 கிலோ மீட்டர் வேகம்... 100 கிலோ மீட்டர் பயணம்' வாகன ஓட்டிகளை அலறவிட்ட சிறுவன்!

பிரான்ஸில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் சிறுவன் ஒருவன் ஓட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த சிறுவனையும், காரையும் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள்இதுதொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரித்த காவல்துறை அதிகாரிகள், அந்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளனர். அதில் சிறுவன் எந்த வழியாக காரை ஓட்டிச் சென்றுள்ளான் என்பதை கண்டறிந்த அவர்கள், அந்த சாலையில் உள்ள அனைத்து கேமராவையும் ஆய்வு செய்தனர். மேலும் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுவனின் புகைப்படத்தையும், காரின் பதிவெண்ணையும் அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisment

cfgn

அந்த காரின் புகைப்படத்தை பார்த்த இளைஞர் ஒருவர் தங்கள் வீட்டுக்கு அருகில் இந்த கார் நீண்ட நேரமாக நிற்பதாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். காவல்துறை அதிகாரிகளை கண்ட அச்சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். இதுதொடர்பாக சிறுவனிடம் விசாரித்த போது, தான் காரை சிறிது தூரம் ஓட்ட விரும்பி எடுத்ததாகவும், ஆனால், வேகமாக ஓட்டியதால் அதிகப்படியானதூரம் கடந்துவிட்டதாகவும் தெரிவித்தான். மேலும், 8 வயதிலேயே கார் ஓட்ட கற்றிருந்ததால், எனக்கு வேகமாக வந்ததில் எந்த சிரமமும் இல்லை என்றும், ஆனால், கழுத்துபுறம் அதிகமாக வலிப்பதாகவும் தெரிவித்துள்ளான். திரும்பி போவதற்கு வழி தெரியாததால் தான் சாலை ஓரத்தில் காரை நிறுத்தினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe