Advertisment

சானியாவுக்கு ஆண் குழந்தை!

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீரரான சானியா மிர்ஸாவுக்கு அழகிய ஆன் குழந்தை பிறந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் கலக்கி வந்தார். அதேபோல பல சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த சானியா மிர்ஸா பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின்னரும் பல வருடங்கள் டென்னிஸில் ஜொலித்து வந்தார் சானியா.

Advertisment

இந்நிலையில், இந்த தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தி சோயப் மாலிக் ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். வாழ்த்தியவர்களுக்கும் பிராத்தனை செய்தவர்களுக்கும் நன்றி, தாயும் குழந்தையும் நன்றாக இருக்கிறார்கள் என்று பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலை கேள்விப்பட்ட இவர்களின் ரசிகர்கள் ட்விட்டரில் #BabyMizraMalik என்று ட்ரெண்ட் செய்தனர்.

Shoaib malik sania mirza
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe