Advertisment

123 கோடிக்கு வாட்ச் வாங்கிய விளையாட்டு வீரர்!!!

ப்ரோ குத்துச்சண்டை வீரரான ப்ளாய்டு மேவெதர் ஒரு பொருளை வாங்குவதற்கு அவர் சம்பாரித்த பணங்களை தண்ணியாக இரைத்து செலவு செய்வார் என்று சொல்வார்கள். அதேபோல தற்போது 18 மில்லியன் டாலருக்கு(இன்றைய மதிப்பில் சுமார் 123கோடி ரூபாய்) ஒரு விலைஉயர்ந்த வாட்சை வாங்கியுள்ளார்.

Advertisment

mayweather

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளா மேவெதர்," நான் புதிதாக ஒரு வாட்ச் வாங்கியுள்ளேன், அதை பில்லியனர் வாட்ச் என்று சொல்வார்கள். அதைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கூகுள் செய்து பாருங்கள். அதன் விலை 18 மில்லியன் என்று காட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment

மேலும் அதில், அந்த வாட்சை தடாஷி புகுஷிமா என்ற ஜப்பானியர்தான் வடிவமைத்துள்ளார். உலகின் சிறந்த அணிகலன் டிசைனர். இனி எந்த ஆபரணங்களாக இருந்தாலும் அவரிடம்தான் வாங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

billionaire watch

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்த வாட்சின் சிறப்பு அம்சங்கள் என்ன என்றால், ஜகோப் & கோ என்று சொல்லப்படும் பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 260 காரட் உடைய வைரம் எமரால்ட் வெட்டுக்கள் மற்றும் 3 காரட்டில் வேறு கற்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 12.33 மி.மீ தடிமன் உடையது. மேவெதரின் பிரமாண்ட மற்றும் சொகுசான விலை கொடுத்து வாங்கிய பொருள் இது மட்டுமல்ல, பான்டோம் ரோலராய்ஸ் கார் மற்றும் 2 மில்லியனுக்குமேல் மதிப்புள்ள உலகின் அதிவேக கார் என்று எண்ணற்ற விலைஉயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளார். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2017 ஆம் ஆண்டிற்கான அதிக சம்பளம் பெற்ற விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்தவர் இவர். ufc என்று சொல்லப்படும் குத்துச்சண்டை போட்டியில் 36 நிமிடங்கள் மட்டுமே கலந்துகொண்டு விளையாடியதற்காக 275மில்லியன் சம்பளம் பெற்றுள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் நான்கு முறைஇந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

sports billionaire boxing
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe