Advertisment

"முகக்கவசம் இனி தேவையில்லை" - இங்கிலாந்தில் முடிவுக்கு வரும் கரோனா கட்டுப்பாடுகள்

borris johnson

Advertisment

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வரும் 27ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் அமலில் இருந்துவரும்பிளான்-பி கரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ளார். மக்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றதன் காரணமாக பிளான்-பி கட்டுப்பாடுகள் திரும்பப்பெறப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிளான்-பி கரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருவதால், இங்கிலாந்து மக்கள் இனி முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. ஊழியர்கள் வீட்டிலிருந்தேபணியாற்றத் தேவையில்லை. அதேபோல் இரவு நேர கிளப்புகள் உள்ளிட்ட கூட்டமான இடங்களுக்குச் செல்ல கோவிட் பாஸ்களும்அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒமிக்ரான்அலை நாட்டில் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக போரிஸ் ஜான்சன் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

England
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe