இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
55 வயதான போரிஸ் ஜான்சன், அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்து தேர்தல் மிகப்பெரிய வெற்றியை பெற்று அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கடந்த 2010-ம் ஆண்டு லண்டன் மேயர் தேர்தலில் தனக்காக பிரசாரம் செய்த கேரி சைமண்ட்ஸ் (31) என்பவரை போரிஸ் ஜான்சன் காதலித்து வந்தார். ஏற்கனவே இருமுறை திருமணமான போரிஸ் ஜான்சன் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. முதல் இரண்டு மனைவிகளிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் கேரியுடன் தற்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரி தற்போது கர்ப்பமாக இருப்பதால், பிரசவத்திற்கு பின்பு திருமணம் நடைபெறுமா அல்லது முன்பே நடைபெறுமா என அறிவிக்கப்படவில்லை. இதன் மூலம் இங்கிலாந்து நாட்டின் 200 ஆண்டு கால வரலாற்றில், பிரதமர் பதவியில் இருந்தவாறு திருமணம் செய்து கொள்ளப்போகிற முதல் நபர் என்ற பெயரையும் போரிஸ் ஜான்சன் பெறுகிறார்.