Skip to main content

பதவியை ராஜினாமா செய்ய தயாரான பிரிட்டன் பிரதமர்... புதிய பிரதமர் தேர்வு...

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

 

boris johnson elected as prime minister of britain

 

 

அதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் பிரிட்டன் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்நிலையில் கான்செர்வேடிவ்  கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக இருந்த தெரசா மே விரைவில் பதவி விலகுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
King Charles of England has cancer

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மன்னர் 3 ஆம் சார்லஸுக்கு (வயது 73) புற்றுநோய் இருப்பது இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால், நேற்று முதல் அவருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை தொடங்கப்பட்டு இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது. புரோஸ்டேட் (prostate) என்ற சிகிச்சைக்கு சென்றபோது புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் புரோஸ்டேட் வகை புற்றுநோய் பாதிப்பு இல்லை எனவும் மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Next Story

நடுக்கடலில் சிக்கிய கப்பல்; ஹாலிவுட்டையே மிஞ்சும் ரியல் ஹைஜாக்

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

A ship stuck in the middle of the sea; a real hijack that surpasses Hollywood


நடுக்கடலில் கப்பல் ஒற்றை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கி முனையில் ஹைஜாக் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரிட்டனை சேர்ந்த தனியார் நபரின் 'கேலக்ஸி லீடர்' என்ற கப்பல் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜப்பானிய நிறுவனம் இயக்கிவந்த இந்த கப்பலை ஹெலிகாப்டர் மூலம் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல், திடீரென கப்பலில் இறங்கி கப்பல் கேப்டனை துப்பாக்கி முனையில் மிரட்டி, கப்பலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. கப்பலை ஹைஜாக் செய்தது யார் என்று தெரியாத நிலையில், ஹவுதி நாட்டின் டிவி சேனல்களில் கப்பலை ஹைஜாக் செய்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வீடியோ வெளியாகியுள்ளது. ஹாலிவுட் தரத்தையும் தாண்டும் அளவிற்கான இந்த ரியல் ஹைஜாக் காட்சிகள் உலக அளவில் பேசுபொருளாகி வருகிறது.

 

இந்நிலையில் கப்பலில் சிக்கியுள்ள 25 குழுவினர்களும் இஸ்லாமிய சட்டப்படி நடத்தப்படுவர் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.