பிரிட்டன் பிரதமராக இருந்த தெரசா மே பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

Advertisment

boris johnson elected as prime minister of britain

அதனை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் பிரிட்டன் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்நிலையில் கான்செர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக பிரதமராக இருந்த தெரசா மே விரைவில் பதவி விலகுவார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.