fac

Advertisment

கலிஃபோர்னியாவின் மின்லோ பார்க்கில் அமைந்துள்ள ஃபேஸ்புக்கின் தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். நியூயார்க் போலிஸுக்கு கிடைத்த தகவலின்படி அங்கு வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகித்து கலிபோர்னியா காவல்துறைக்கு செய்தி அனுப்பினர். அதை தொடர்ந்து மின்லோ பார்க் போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கு விரைந்தனர். அங்குள்ள பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அங்கு வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது. இதனால் மின்லோ பார்க் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் யூடியூப் அலுவலகத்தில் மர்ம நபரால் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.