Skip to main content

இறந்தவர்களின் குடும்பத்திற்கு 684 கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்த நிறுவனம்... ஏற்றுக்கொள்ளாத குடும்பத்தார்...

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மற்றும் இந்த ஆண்டு தொடக்கம் என அடுத்தடுத்து போயிங் நிறுவனத்தின் இரு விமானங்கள் பயணிகளுடன் விபத்துக்குள்ளானது.

 

Boeing announces $100 million fund for families of 737 Max crash

 

 

கடந்த ஆண்டு இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த போயிங் விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பயணிகள் உயிரிழந்தனர். அதே போல கடந்த மார்ச் மாதம் எத்தியோப்பியா நாட்டு விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்துகளில் சேர்த்து மொத்தம் 338 பேர் உயிரிழந்தனர்.  

இந்த விபத்துகளுக்கு பின்னர் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க உலக நாடுகள் தற்காலிகமாக தடை விதித்துள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 100 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 684 கோடி ரூபாய்) இழப்பீடாக வழங்குவதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இந்த இழப்பீடை ஏற்க மறுத்துள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட விபரீதம்; அலறிய விமானப் பயணிகள்

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Mid-air mishap and Screaming airline passengers in america

அமெரிக்காவின் சர்வதேச விமான நிலையம் ஒன்றிலிருந்து அலஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ‘போயிங் 737 மக்ஸ்’ ரக விமானம் ஒன்று கடந்த 5 ஆம் தேதி புறப்பட்டது. 

171 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் புறப்பட்ட இந்த விமானம், 16,325 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மையப் பகுதியில் இருந்த ஜன்னல் கதவு ஒன்று திறந்து விமானத்தை விட்டு வீசியடிக்கப்பட்டது. வான்வெளியைவிட விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் அதிகம் இருக்கும் என்பதால், உடைந்த ஜன்னல் வழியாகக் காற்று வேகமாக வெளியேறி விமானத்தில் இருந்த பல பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால், பயணிகளிடையே பதற்றம் நிலவியது. 

இதனையடுத்து, உடனடியாக விமானம் போர்ட்லாண்ட் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு, பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில், அந்த ஜன்னலோர இருக்கையில் பயணிகள் இல்லாததால் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும், தாங்கள் பயன்படுத்தும் அனைத்து 727-9 ரக விமானங்களின் பயன்பாட்டையும் அலாஸ்கார் ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதையடுத்து, எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது. 

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.