Advertisment

ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு; 21 பேர் உயிரிழப்பு

 Blast at railway station; 21 people lost their lives

ரயில் நிலையத்தில் நடந்த திடீர் குண்டுவெடிப்பில்21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையம் பகுதியில் திடீரென குண்டு வெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீர் குண்டு வெடிப்பால் ரயிலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

Advertisment

இது தற்கொலை படையினரின் தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபகுதியில் வேறு இடங்களிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப்பகுதிமுழுவதும் சோதனை செய்து வருகின்றனர். இது எந்த மாதிரியான தாக்குதல் என்பது தொடர்பாகவும் இதற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

incident bomb Pakistan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe