பாகிஸ்தானில் குவெட்டா நகரில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

blast in pakistan quetta

Advertisment

இது குறித்து பாகிஸ்தான் ஊடங்கங்களில் வெளியான செய்தியின்படி காலை 7.35 மணியளவில் ஒரு மார்க்கெட் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 16 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களும் பலத்த சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.