
கடந்த 26.08.2021 அன்று ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வெளியே மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 169 ஆப்கானிஸ்தான் மக்களும், 13 அமெரிக்க இராணுவவீரர்களும்பலியானார்கள்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஆப்கன் பிரிவானஐஎஸ்-கோராசன் அமைப்பு பொறுப்பேற்றது. அதேநேரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காபூலில் தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடி, பழிவாங்குவோம் என சூளுரைத்திருந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. காபூல் அருகே ஏற்கனவே இரண்டு முறை குண்டு வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்திருந்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில், தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆனால் இதில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் தற்போதுவரை வெளியாகவில்லை.
Follow Us