சீன நிறுவனமான ஜியோமி ரெட்மி தனது புதிய நோட் 6 புரோ மாடலை 22-ம் தேதி அறிமுகம் செய்தது.
இந்த நோட் 6 புரோ 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் விலை ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999 என்று அறிமுகமானது. மேலும் பிளிப்கார்ட் ஆன்லைன் விற்பனையில் ‘பிளாக் ஃப்ரைடே விற்பனை’ மூலம் ரூ. 1000 ஆஃபர் என அறிவித்திருந்தது. அதனால் இந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் 6 லட்சம் ரெட்மி நோட் 6 புரோ விற்று சாதனை படைத்துள்ளது ரெட்மி நோட் 6 புரோ.