Advertisment

"பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்கள் இந்தியாவிற்கே அச்சுறுதலாக அமைந்தன" - இம்ரான் கான் விமர்சனம்!

imran khan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை விமர்சித்திருந்தார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில்பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், மீண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும், பாஜகவையும் விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாகஇம்ரான்கான், "பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்அமைப்பின் சித்தாந்தங்கள் இந்தியாவிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்தன. ஏனெனில் இவைகளின் சித்தாந்தங்கள், முஸ்லிம்களை மட்டும் குறிவைக்கவில்லை. சமமான குடிமக்களாககருத்தப்படாதசீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலினத்தவர்கள் ஆகியோர்களையும்குறி வைத்தது" என கூறியுள்ளார்.

Advertisment

மேலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்துநீக்கம் குறித்து பேசியுள்ள இம்ரான்கான், "ஆகஸ்ட் 5 2019க்குபிறகு காஷ்மீரில் அட்டூழியங்கள் தீவிரமானது. சர்வதேச மன்றங்களில் காஷ்மீருக்கான தூதரக நான் இருப்பேன். காஷ்மீர் மக்களின் போராட்டத்தில் பாகிஸ்தான் துணை நிற்கும்" எனவும்கூறியிள்ளார்.

kashmir imran khan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe