birds

அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தின் கில்பெர்ட் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள், அங்கிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அது என்ன புகார் என்றால், இந்த பகுதியில் இருக்கும் பறவைகள் எங்களை தொந்தரவு செய்கிறது. தொந்தரவு என்றால், வீட்டுக் கதவை மோதுவது, வெளியில் நடம்மாடும் போது தலையில் வந்து நிற்பது, காருக்குள் நுழைவது போன்று செய்துள்ளன.

Advertisment

இதனையடுத்து நடந்த காவல் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது என்ன என்றால், பறவைகள் அவ்வாறு தொந்தரவு செய்ய காரணம். அவை போதையில் இருப்பதுதான் என்று தெரிவித்துள்ளனர். பறவைகள் புளித்த பழங்களை உண்டால் போதையாகுமாம். அந்த கில்பெர்ட் பகுதியில் நிறைய பழங்கள் புளித்து இருக்கிறது. அதனை சாப்பிட்டு போதையாகிதான் பறவைகள் இவ்வாறு செய்கின்றன என்று தெரிவித்துள்ளனர். இந்த போதை சுமார் 2நாட்கள் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisment