பிரதமர் மோடிக்கு உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான பில்கேட்ஸ் நடத்தும் பில்கேட்ஸ் மெலின்டா அறக்கட்டளை சார்பாக விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

billgates melinda trust awards modi

இந்தமாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். மேலும் செப்டம்பர் 22 ஆம் தேதி இந்திய மக்களின் முன்னிலையில் உரையாற்ற உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடிக்கு தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தியமைக்காக பில் கேட்சின் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டுள்ளார்.