மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ உதவி திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 100 நாட்களில் 6.85 லட்சம் பேர் அதில் பயன் பெற்றதாக செய்தித்தாளில் வந்த செய்தியை மத்திய அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தனது பக்கத்தில் பகிர்ந்து பதிலளித்துள்ள பில் கேட்ஸ், 'இந்த திட்டம் 100 நாட்களை கடந்ததற்கு எனது வாழ்த்துக்கள். 100 நாட்களில் இந்த திட்டத்தில் இவ்வளவு மக்கள் பயனடைந்துள்ளனர் என்பதை பார்க்கும் பொது மகிழ்ச்சியாக உள்ளது' என கூறியுள்ளார்.
மோடியின் திட்டத்தை பாராட்டிய பில் கேட்ஸ்...
Advertisment