ADVERTISEMENT

ஒரு பில்லியன்ல மிஸ்ஸான பில்கேட்ஸின் ராங்க்...

04:31 PM Jul 18, 2019 | santhoshkumar

மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் பலருக்கும் பரிட்சயமானவர் பில் கேட்ஸ். உலக பணக்காரர் லிஸ்டில் பல வருடங்கள் முதலிடத்தை தக்க வைத்திருந்தவர். காலங்கள் ஓட ஓட முதலிடத்தில் இருந்து இறங்கி இரண்டாம் இடத்தை பிடித்தார். தற்போது இந்த இடத்திலிருந்தும் இறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ்தான் தற்போது முதலிடத்தை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் புளூம்பெர்க்க் வெளியிட்ட பணக்காரர்கள் லிஸ்ட்டில் ஜெப் பெசோஸ் அதே முதலிடத்திலேயே இருக்கிறார். ஆனால், கடந்த வருடம் இரண்டாவது இடத்திலிருந்த பில் கேட்ஸ் இந்த வருடம் மூன்றாவது இடத்திற்கு இறங்கியுள்ளார். இரண்டாவது இடத்தை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் பிடித்துள்ளார்.

இவர் எல்விஎச்எம் எனும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். இந்த ஆண்டுதான் இவரது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. பில்கேட்சை விட ஒரு பில்லியன் கூடுதலாக சொத்து மதிப்பு வைத்திருப்பதால் இரண்டாவது பிடித்திருக்கிறார். புளூபெர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலின்படி,

1. ஜெப் பெசோஸ் - 125 பில்லியன் டாலர்
2. பெர்னார்ட் அர்னால்ட் - 108 பில்லியன் டாலர்
3. பில்கேட்ஸ் -107 பில்லியன் டாலர்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT