அடுத்த மாதம் படையெடுக்கிறதா ரஷ்யா?: "பதிலடி தர தயாராகவுள்ளோம்" - உக்ரைன் அதிபரிடம் ஜோ பைடன் உறுதி!

JOE BIDEN

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நீண்டகாலமாகவே பிரச்சனை நிலவி வருகிறது. இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் பகுதியான கிரிமியாவை ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்து, அதைத்தன்னுடன் இணைத்துக் கொண்டது. மேலும் ரஷ்யஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள், அந்தநாட்டின்டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர்.இந்தநிலையில்தற்போது ரஷ்யா, உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது.

இதனால் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டமில்லை எனக் கூறி வருகிறது. ஆனால் இதனை நம்பாத அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், உக்ரைனுக்கும், கிழக்கு ஐரோப்பாவிற்கும் அதிநவீன பாதுகாப்பு ஆயுதங்களையும், போர் கப்பல்களையும், போர் விமானங்களையும் அனுப்பியுள்ளன.

இதற்கிடையேரஷ்யா உக்ரைன் எல்லையில் குவித்துள்ள படைகளைத் திரும்ப பெற, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ கூட்டணி விரிவுபடுத்தப்படுவதுதவிர்க்கப்படும், நேட்டோவில் உக்ரைனை சேர்க்கப்படாது என்பது போன்ற உத்தரவாதங்களைவலியறுத்தியது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்காவும், நேட்டோ கூட்டணியும் மறுத்துள்ளது. இதனால் போர் பதற்றம் அதிகமாகி வருகிறது.

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளார். அப்போது ஜோ பைடன், பிப்ரவரியில் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பதற்கு தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இந்த உரையாடலின்போது, ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், அதற்கு உறுதியான பதிலடி கொடுக்க அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும், நட்பு நாடுகளும் தயாராக இருப்பதை ஜோ பைடன் மீண்டும் உறுதி உறுதிப்படுத்தினார் என்றும்,உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பைடன்அடிக்கோடிட்டு காட்டினார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

America Russia Ukraine
இதையும் படியுங்கள்
Subscribe