JOE BIDEN

அமெரிக்க இராணுவத்தில்உள்ள பெண்களுக்கும்ஆண்களுக்கும்பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள்நீண்ட காலமாகவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இராணுவத்தில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களை இராணுவ நீதி சட்டத்தின் கீழ் குற்றமாக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்க இராணுவத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இனி குற்றமாகக் கருதப்படும்.

Advertisment

இதற்கு முன்னதாக அமெரிக்க இராணுவத்தில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், ஜோ பைடனின்நிர்வாக உத்தரவையடுத்துபாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் சிறை தண்டனைக்கு உள்ளாகலாம்எனக் கருதப்படுகிறது.

Advertisment

2020ஆம் ஆண்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான 20 வயது இராணுவவீராங்கனை கொல்லப்பட்டதன் விளைவாக தற்போது ஜோ பைடன் இராணுவத்தில்நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களைக் குற்றமாக்கும் உத்தரவைப் பிறப்பித்திருப்பதுகுறிப்பிடத்தக்கது.