Skip to main content

பாரதம் விவகாரம்; சீன ஊடகக் கட்டுரையால் சலசலப்பு! 

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

The Bharat Affair; A stir by the Chinese media!

 

ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், குளோபல் டைம்ஸ், " நாட்டின் பெயரை மாற்ற யோசிப்பதை விட முக்கியமான விசயங்கள் இருக்கிறது" என அறிவுறுத்தி பரப்பரப்பை கிளப்பியுள்ளது.

 

இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற பாஜக அரசு முனைவதாகக் கூறி பல கருத்துகள், கண்டனங்கள் எழுந்தன. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற கூற்றைப் பல வருடங்களாகவே ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தி வருகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இம்மாதம் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ‘ஒரே நாடு ஒரு தேர்தல்’ என்பதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் இந்தியா என்ற நாட்டின் பெயரைப் பாரதம் என மாற்றி பாஜக அரசு தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியா எனும் பெயர் மாற்றப்படாது என தெரிவித்தார். 

 

இந்நிலையில், ஜி20 மாநாடு துவங்க இரண்டே நாட்கள் இருக்கும் தருணத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகம், குளோபல் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், "இந்தியாவில் சமீபமாக பாரதம் பெயர் மாற்றம் விவகாரம் பேசப்பட்டு வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாடு உலகளவில் கவனம் பெற்றிருக்கும் நேரத்தில், டெல்லி உலகிற்கு எதனை வெளிப்படுத்த விரும்புகிறது?.

 

தொடர்ந்து, 2022 டிசம்பரில் இந்தியா ஜி 20 தலைவர் பதவியை பெற்றபோது, ‘இந்தியா வகித்த ஒரு வருட ஜி 20 தலைவர் பதவி உள்ளடக்கமான, லட்சியமான, தீர்க்கமான மற்றும் செயல் சார்ந்ததாக இருக்கும்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்தன. இந்தியா தனது ஜி20 தலைவர் பதவியை நாட்டின் சர்வதேச செல்வாக்கை அதிகரிக்க பயன்படுத்த விரும்புகிறது என்று தெளிவாக தெரிந்தது.

 

சமீபத்தில் நாட்டின் பெயர் மாற்ற பிரச்சனையும் எழுந்தது. இந்திய மக்கள் தங்கள் நாட்டை எப்படி வேண்டுமானால் அழைக்கும் சுதந்திரம் உள்ளது. இருப்பினும், பெயர் மிக முக்கியமான விஷயம் இல்லை. மாறாக, இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு முன்பு இருந்த அதன் பொருளாதார அமைப்பு மறுபடியும் இந்தியாவால் முழுமையாகச் சீர்திருத்த முடியுமா என்பதுதான் முக்கியமே. இதுவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், சர்வதேச அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும். 

 

மேலும், புரட்சிகர சீர்திருத்தம் இல்லாமல், இந்தியா புரட்சிகர வளர்ச்சியை அடைய முடியாது. இதனையடுத்து, இந்தியா 1991ல் பொருளாதாரத்தை தாராளமயமாக்கியது. அதுமுதல், பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் மோடி நிர்வாகம் லட்சிய நோக்குள்ள அரசாங்கமாக இருந்து வருகிறது. ஆனால், வர்த்தக பாதுகாப்புவாதத்தை நோக்கி இந்தியா அதிகளவில் மாறி வருகிறது. அதன் முந்தைய சில சீர்திருத்த நடவடிக்கைகளும் இதனால் முடங்கியுள்ளன. அடுத்து, 2014 ஆம் ஆண்டு மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், இந்தியாவை எப்படி உற்பத்தி வல்லரசாக மாற்றுவது என்பது குறித்து  நிறைய விவாதங்கள் நடந்தன. இதற்கான வழி என்பது, இந்தியா அதன் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை மேலும் தாராளமயமாக்க வேண்டும். சீனா உட்பட உலகம் முழுவதும் உள்ள நிறைய நிறுவனங்களுக்கு திறந்த, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முதலீட்டு சூழலை ஏற்படுத்த வேண்டும். சமீபத்தில் இந்தியா சில சீன நிறுவனங்களின் மீது கடுமையாக நடந்து கொண்டது. இதுவே, முதலீட்டாளர்களின் நம்பிகையை குறைத்துவிடும்.

 

இந்தியா டிசம்பர் 2022ல் இந்தோனேசியாவில் ஜி 20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது. சில நாட்களிலே இந்தியா தனது முதல் ஜி 20 தலைவர்கள் உச்சி மாநாட்டைக் கூட்டவுள்ளது. இந்த நிலையில், இந்தியா ஜி20 தலைவர் பதவியைப் பயன்படுத்தி தனது பொருளாதாரத்தை சீர்திருத்துவதற்கும், அதன் வெளிப்படை தன்மையை விரிவுபடுத்துவதற்கும், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நியாயமான வணிகச் சூழலை உருவாக்க வேண்டும். மேலும் படிப்படியாக இதனை செயல்படுத்த வேண்டும். நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா என்பதை சிந்திப்பதை விட மேல் சொல்லப்பட்ட இவை அனைத்தும் முக்கியம்" என குளோபல் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டுள்ளது.

 

2020 ஏப்ரல்,மே-ல்  சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் கிழக்கு லடாக்கின் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.எ.சி) விவகாரத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்டது. அதுமுதல், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மோசமடைந்தன. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் மாநாடு 2023ல் சீன பிரதமரிடம் மோடி எல்லை விவகாரம் குறித்து பேசியதாக செய்திகள் வந்தன. இருந்தும், சீனா வெளியிட்ட புதிய வரைபடத்தின் காரணமாக பெரும் அதிர்வுகள் எழுந்தன. இந்த சிக்கல் காரனமாகத் தான் ஜி20 மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லிக்கு வராமல் சீனப் பிரதமர் லீ கியாங் ஜி20 கலந்து கொள்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'இந்திரா காந்தி சிலையின் சர்ச்சைகளும் சென்டிமென்ட்களும்'- கேள்விகளை அடுக்கிய கராத்தே தியாகராஜன்  

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
 'Indira Gandhi Statue Controversies and Sentiments' - Karate Thiagarajan Asks Questions

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலையை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்திருக்கும் நிலையில், இந்திரா காந்தி சிலை அமைப்பதில் சர்ச்சைகள் மற்றும் சென்டிமென்ட்கள் இருப்பதாக பாஜக நிர்வாகியான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் 24 ஆம் தேதி செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் இதில் மகிழ்ந்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இந்தியாவில் எமர்ஜென்சியை இந்திரா காந்தி பிரகடனப்படுத்திய நாள் ஜூன் 25. அந்த நெருக்கடி நிலை காலத்தில் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது திமுக தான். அப்படி இருக்கும் நிலையில் இந்திரா காந்திக்கு திமுக அரசின் சார்பில் சிலையா/ என்று திமுகவினர் மனதில் எதிரொலிக்கிறது.

அதேபோல் இந்திராவின் எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதற்காகத் தான் அவருக்கு சிலை அமைக்கும் அறிவிப்பை ஜூன் 24ஆம் தேதி திமுக அரசு அறிவித்திருக்கிறதா என்று உணர்வுள்ள காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்திரா காந்தி சிலையை சுற்றி சர்ச்சைகளும், சென்டிமெண்டுகளும் சூழ்ந்து இருப்பது திமுக தலைமைக்கு தெரியுமா? தெரியாதா? என்பது தெரியவில்லை.

அகில இந்திய அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற தலைவராக இருந்த வழக்கறிஞர் ஏசைய்யா என்பவர் இந்திரா காந்திக்கு சென்னையில் சிலை வைக்க சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் 1986 ஆம் ஆண்டு அனுமதி கோரி இருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை எதிர்த்து அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு இந்திரா காந்திக்கு சிலை அமைக்க அனுமதி பெறுகிறார் ஏசைய்யா. அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்திற்கு சிலை வைக்க அனுமதி கிடைக்கிறது. சிலை அமைக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் முயற்சிகள் எப்போது தொடங்கியதோ அப்போதிலிருந்தே தேசிய அரசியலில் ஏறுமுகமாக இருந்த அமிதாப்பின் அரசியல் வாழ்க்கை இறங்கு முகமானது. தொடர் சரிவுகளை சந்தித்தார். ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் படிப்படியாக அரசியலில் இருந்து விலகவும் நேர்ந்தது. சிலை அமைக்கும் முயற்சிகளும் முறிந்தது.

இதன் பிறகு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி சந்தித்து இந்திரா காந்திக்கு சிலை அமைப்பது குறித்து விசாரித்தார் ஏசைய்யா. அப்போது அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் சார்பில் பெறப்பட்ட அனுமதியை தமிழக காங்கிரஸ் கமிட்டி பெயருக்கு மாற்றி உத்தரவினை உயர்நீதிமன்றத்தில் பெற்றுக் கொடு என்று ஏசைய்யாவிடம் தெரிவித்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. அதன்படி அனுமதி மாற்றி பெறப்பட்டு அதனை வாழப்பாடியிடம் கொடுத்தார் ஏசைய்யா. சிலை அமைக்கும் முயற்சியை வாழப்பாடி எடுத்த மூன்றாவது நாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி அவருக்கு பறிபோனது. இருந்தாலும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்திரா சிலை குறித்த விஷயத்தை வாழப்பாடி ராமமூர்த்தி கொண்டு சென்ற போது இந்திராவுக்கு சிலை வேண்டாம் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்கலாம் என்று புதிய யோசனை சொன்னார் ஜெயலலிதா.

அதாவது 1991-ல் தேர்தலுக்கு முன்பு ராஜீவ் காந்தி கடைசியாக மாலை அணிவித்தது ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இந்திரா காந்தி சிலைக்கு தான். சென்டிமெண்டாக இது சரியில்லை என ஜெயலலிதாவுக்கு அப்போது சொல்லப்பட்டிருப்பதால் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்திராவுக்கு சிலை வேண்டாம் என வாழப்பாடியிடம் ஜெயலலிதா சொன்னதன் ரகசியம்.

இதையடுத்து இந்திரா காந்தியை கைவிட்டு விட்டு சென்னையில் சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் ராஜீவ் காந்திக்கு சிலை அமைக்கப்பட்டது. வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையில் ஜெயலலிதாவின் முன்னிலையில் ராஜீவ் காந்தி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் நரசிம்மராவ். இந்நிலையில் திமுக -தமாகா கூட்டணி 1996-ல் அமோக வெற்றி பெற்றது. தாமாக தலைவர் மூப்பனாரை சந்தித்து இந்திரா காந்தி சிலை அமைக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார் ஏசைய்யா. இந்திரா மீது பற்றுதல் கொண்ட மூப்பனார் சிலை அமைக்கவும் அதற்கான செலவுகளையும் ஏற்றுக் கொண்டார். உடனே சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பில் சிலையும் அமையும் இடத்தை பார்வையிட்டார்/மேலும் புகழ்பெற்ற சிற்பி மணிநாகப்பாவிடம் சிலை வடிவமைக்கும் பணிகளை துவக்குமாறு அறிவுறுத்தியதுடன் முன்பணமாக மூன்று லட்சம் கொடுத்தார் மூப்பனார்.

சிலை அமைக்கும் பணி துவங்கியதுமே மூப்பனார் பிரச்சனைகளை சந்தித்தார். மறைந்தும் போனார். இந்திராவுக்கு சிலை அமைக்கும் பணி துவக்கத்திலேயே முற்றுப்பெற்றது ஏசைய்யாவும் இறந்து போனார். ஆக இந்திரா காந்திக்கு சிலை அமைக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இப்படி இந்திராவுக்கு சிலை எடுக்க முயற்சித்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு சரிந்து போனதாக சிலையை சுற்றி சர்ச்சைகளும் செண்டிமெண்டுகளும் அப்போதே உலா வந்தன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நீண்ட கால மூத்த அரசியல் தலைவர்கள் பலருக்கும் இந்த செண்டிமெண்ட் விவகாரம் தெரியும்.

இந்த விவகாரம் எல்லாம் தெரிந்து தான் பெரியாரின் பேரன் என்று வர்ணிக்கப்படுகின்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட காங்கிரஸ் தலைவர் யாரும் இந்திராவுக்கு சிலை அமைக்க முயற்சி எடுத்ததே இல்லை. இப்படிப்பட்ட சூழலில் தற்போது இந்திராவுக்கு சிலை அமைக்கப்படும் என்று திமுக அரசு சட்டமன்றத்தில் அறிவித்துள்ளது. அதனை காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வரவேற்கிறார்.

புரட்சி பாரதம், புதிய தமிழகம், விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி என பல்வேறு கட்சிகளுக்கு சென்று விட்டு காங்கிரஸ் கட்சியில் தஞ்சமடைந்து தலைவராக வந்துவிட்ட செல்ல பெருந்தகைக்கு இந்த வரலாறு தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரியாமல் போகலாம். தெரிந்திருக்கவும் நியாயம் இல்லை. ஆனால் தமிழகம் பெரியார் மண் எனச் சொல்லும் திராவிட இயக்கத்தினருக்கும், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், காங்கிரசின் மூத்த தலைவர்களுக்கும் இந்த சர்ச்சைகளும், சென்டிமென்ட்டும் நன்றாகவே தெரியும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திராகாந்தி சிலை அறிவிப்பை எப்படி திமுக அரசு அறிவித்தது என்று தெரியவில்லை. இந்த சென்டிமென்ட் விவகாரத்தை அறிவித்துள்ள திமுகவுக்கு நெருக்கமான காங்கிரசைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ்,, கோபண்ணா போன்றோர் இதை திமுக தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வார்களா? இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்களாக இருந்த யாரும் சத்தியமூர்த்தி பவனில் குறைந்தபட்சம் ஒரு மார்பளவில் கூட இந்திராவிற்கு சிலையை ஏன் அமைக்கவில்லை? மேலும் அமைச்சர் சாமிநாதனும் செல்லப்பெருந்தவையும் சிலை அமையும் அண்ணா சாலை பென்சில் பகுதி பார்வையிட்டு அதன் புகைப்படத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

Next Story

பிஜு ஜனதா தளம் கட்சியின் அதிரடி அறிவிப்பு; பா.ஜ.கவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த சிக்கல்?

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
Biju Janata Dal Action Announcement to BJP's next problem?

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை வீழ்த்தி முதல் முறையாக பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. 

முதல்வராக பொறுப்பு வகித்து வந்த பிஜு பட்நாயக் மறைவுக்கு பிறகு, அவருடைய மகன் நவீன் பட்நாயக், பிஜு ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். பின்பு கடந்த 2000ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் அமோக வெற்றி பெற்று அம்மாநில முதல்வரானார். அதனைத் தொடர்ந்து, ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்று 24 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்த நவீன் பட்நாயக், மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். 

அதன்படி, மொத்தம் 147 இடங்களில்  78 இடங்களிலும் பா.ஜ.க கைப்பற்றி முதல்முறையாக ஆட்சியை பிடித்தது. பிஜு ஜனதா தளம் 51 இடங்களையும், காங்கிரஸ் 14 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடங்களிலும், சுயேட்சை 1 இடங்களிலும் வென்றது. அதே போல், மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ.க 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெற்றி பெற்றியிருந்தது. பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியைக் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை என்று அறிவிப்பை நவீன் படநாயக்கின் பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. 

கடந்த 2000, 2004ஆம் ஆண்டுகளில் பா.ஜ.கவோடு பிஜு ஜனதா தளம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது வெற்றி பெற்றது. கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவை, சட்டமன்றத் தேர்தலின் போது பிஜு ஜனதா, பா.ஜ.க கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிட்டாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரச்சனையின் அடிப்படையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவை பிஜு ஜனதா தளம் கடைபிடித்து வந்தது. 

Biju Janata Dal Action Announcement to BJP's next problem?

இதனிடையே, நடைபெற்று முடிந்த தேர்தலில் பிஜு ஜனதா தளம் படுதோல்வியடைந்துள்ளது. இந்த நிலையில், தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை பிஜு ஜனதா தளம் எடுத்துள்ளது. இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது, ‘நாடாளுமன்றத்தில் இனி பா.ஜ.கவுக்கு எங்களின் ஆதரவு இல்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு என்ற கேள்விக்கே இடமில்லை. இனி நாங்கள் எதிர்கட்சி மட்டுமே’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.