பாகிஸ்தான் நாட்டில் மோசமான பொருளாதார நிலை நிலவி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அதனை சரிசெய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

Advertisment

belly dance in pakistan investors meet

வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகைகள், அரசு சார்பாக பல துறைகளிலும் சிக்கன நடவடிக்கைகள் என பொருளாதாரத்தை உயர்த்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அசர்பைஜான் நாட்டின் தலைநகரான பகுவில் செப்டம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை பாகிஸ்தானை சேர்ந்த நிறுவனம் ஒன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது. பெஷாவரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் இந்த நிறுவனம் நடத்திய மாநாட்டில் ஏராளமான வெளிநாட்டு தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கு வந்த விருந்தினர்களைக் கவர நடன நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது தற்போது சர்ச்சையாகியுள்ளது. மேடையில் நடைபெற்ற இந்த ஆபாச நடன வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, இதனை பாகிஸ்தானியர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்தியர்கள் இந்த விடியோவை ஷேர் செய்து கிண்டல் செய்துவரும் நிலையில், பாகிஸ்தானியர்கள் அந்த நிறுவனத்திற்கும், பாகிஸ்தானிற்கும் கண்டனங்களை தெரிவித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.