Belgian woman tortured in Pakistan

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று முன்தினம்(14.8.2024) கை,கால் கட்டப்பட்ட நிலையில் சாலையோரம் மயங்கிக் கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர், அண்மையில்தான் பாகிஸ்தானுக்கு வந்துள்ளார் என்றும் தெரியவந்தது. மேலும் அந்த பெண், அடையாளம் தெரியாத ஒரு மர்ம கும்பல் என்னை 5 நாட்கள் அடைத்து வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று கண்ணீர் மல்க போலீஸில் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பெண்ணிடம் பெற்ற தகவலின் அடிப்படையில், தமீசுதீன் என்ற இளைஞரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தினம். அந்நாளில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெல்ஜியம் நாட்டுப் பெண் பாகிஸ்தான் வீதிகளில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.