லெபனான் நாட்டிலுள்ள சிடான் நகரத்தில் இருக்கும் கேஜிஎப் மருத்துவமனை வாசலில் வயதான பெண் ஒருவர் பிச்சை எடுத்து வந்துள்ளார். நீண்ட காலமாக மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து வருந்ததால் மருத்துவமனை ஊழியர்களுக்கு இவரை நன்றாக தெரியும். அதனால் அப்பெண்ணுக்கு மருத்துவமனை ஊழியர்கள் தினமும் பிச்சைப் போட்டு சென்றுள்ளனர். இதனை அவர் ஜேடிபி என்ற வங்கியில் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பணம் திரும்ப கிடைக்கும் என அந்நாட்டு அரசு உறுதி அளித்திருந்தது.இதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பாட்டியின் வீட்டுக்குவங்கியில் இருந்துஇரண்டு காசோலைகள் வந்துள்ளது. அதில் இந்திய மதிப்பில் சுமார் 6 கோடியே 37 லட்ச ரூபாய் இருந்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து தெரிவித்த மருத்துவமனை செவிலியர் ஒருவர் கூறும்போது, "இவரை பிச்சை எடுப்பவர் என்றே நினைத்து இருந்தோம். 12 வருடமாக மருத்துவமனை வாசலில்தான் பிச்சை எடுத்து வருகிறார். அவரை இங்கு எல்லோருக்கும் நன்றாக தெரியும். அவர் இப்போது கோடீஸ்வரியா?என்று எங்களுக்குஆச்சரியமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.