அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சாலையோர கடையின் குடை மீது தேனீக்கள் சூழ்ந்துள்ளன. இதனால், டைம்ஸ் சதுக்கம் 7வது அவென்யூ 43ஆம் தெருவை போலீஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, அதை மூடினார்கள்.
மக்கள் அதிகம் நடமாடும் இடமான இங்கு 30,000 க்கும் மேற்பட்ட தேனீ படைகள் சூழ்ந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
குடையில் சூழ்ந்திருந்த தேனீக்களை போலீஸ்காரர்கள் 45 நிமிடங்கள் வரை வேக்கும் க்ளீனர் வைத்து உரிந்து, சேகரித்தனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேரங்கள் கழித்து டைம் சதுக்கத்தில் மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டனர்.