சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அந்தவகையில் மாரடைப்பால் இறந்துபோன முன்னாள் ராணுவ வீரரின் உடலை எடுத்துச் செல்லக்கூட பாதை இல்லாமல் வயக்காட்டில் தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது. இதனை பார்ப்பவரை கலங்கவே வைத்திருக்கிறது.

basic needs ain't provided by the government

Advertisment

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர் வசதியோ, சாலை, மருத்துவமனை வசதிகள் என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. அங்குள்ளவர்கள் இறந்த உடலை எடுத்துச் செல்ல ஒருபாதை கூட இல்லை, நடவு செய்யப்பட்ட வயலில் இறங்கியே இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இன்று வரை இருக்கிறது.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்கிற முன்னாள் ராணுவ வீரர் திங்கள்கிழமை அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு 20 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நடைபெற்றது, ஒத்தையடி பாதையில் வந்த அவரது சடலத்தை ஏற்றி வந்த வாகனம், பாதியிலேயே வழியில்லாமல் நிறுத்தப்பட்டது. இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் மணிமாறனின் சடலத்தை சுமந்துகொண்டு வயல்களில் இறங்கி சென்று அடக்கம் செய்தனர்.

Advertisment

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்துக்கு இதுவரை எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை, யாராவது இறந்தால் பாதை வசதி இல்லாமல் இப்படி வயல்காட்டில் இறங்கித்தான் சடலத்தை தூக்கி செல்ல வேண்டிய அவலம் இருக்கிறது. உடல் நலக்குறைவு ஏற்பட்டால் கூட அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ் எங்களது கிராமத்திற்கு வழியில்லாமல் வரத்தயங்குவார்கள். உயிருக்கு போராடுபவர்களை கட்டிலில் படுக்க வைத்து மூன்று கிலோமீட்டர் தூரம் நாங்கள் தூக்கி செல்லும் அவல நிலையில் இன்றும் இருக்கிறது" என்று கலக்கமாக கூறுகின்றனர்.